What Is Advent? Biblical Meaning & Four Themes | திருவருகைக் காலம் என்றால் என்ன?

Advent Introduction · திருவருகைக் கால அறிமுகம்

🕯️ What Is Advent?

🕯️ திருவருகைக் காலம் என்றால் என்ன?

A four-Sunday journey centred on Christ

கிறிஸ்துவை மையமாகக் கொண்ட நான்கு ஞாயிறுகளின் பயணம்

Key references: Isaiah 9:6; Luke 2:10–11; John 14:3
முக்கிய வேதப்பகுதிகள்: ஏசாயா 9:6; லூக்கா 2:10–11; யோவான் 14:3

🌟 A Season Centred on Christ கிறிஸ்துவை மையமாகக் கொண்ட காலம்

The word Advent comes from the Latin word adventus, meaning “coming” or “arrival.” Advent is observed across the four Sundays leading up to Christmas in many Christian traditions. It offers a deliberate pause from seasonal busyness and directs our attention to Christ.

Advent என்ற சொல் “வருகை” என்று பொருள்படும் adventus என்ற இலத்தீன் சொல்லிலிருந்து வந்தது. பல கிறிஸ்தவ மரபுகளில், கிறிஸ்துமஸுக்கு முந்தைய நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் திருவருகைக் காலம் கடைப்பிடிக்கப்படுகிறது. பண்டிகைக் காலத்தின் பரபரப்பிலிருந்து சற்று விலகி, கிறிஸ்துவின்மேல் நமது கவனத்தைச் செலுத்த இது உதவுகிறது.

💛 Central Message · மையச் செய்தி

At Christmas, we celebrate that God came near to us; Advent asks whether we are drawing near to Him.

கிறிஸ்துமஸில், தேவன் நம்மிடம் நெருங்கி வந்ததை நாம் கொண்டாடுகிறோம்; நாம் அவரிடம் நெருங்கிச் செல்கிறோமா என்று திருவருகைக் காலம் நம்மைச் சிந்திக்கச் செய்கிறது.

🕯️ Four Biblical Themes நான்கு வேதாகமக் கருப்பொருள்கள்

During this Advent journey, we will reflect on four biblical themes: Hope, Peace, Joy and Love.

இந்தத் திருவருகைப் பயணத்தில், நம்பிக்கை, சமாதானம், மகிழ்ச்சி, அன்பு ஆகிய நான்கு வேதாகமக் கருப்பொருள்களைத் தியானிப்போம்.

🕯️ Hope · நம்பிக்கை

God always keeps His promises.

தேவன் தமது வாக்குத்தத்தங்களை எப்போதும் நிறைவேற்றுகிறார்.

🕊️ Peace · சமாதானம்

Jesus is the promised Prince of Peace.

வாக்குத்தத்தம் செய்யப்பட்ட சமாதானப் பிரபு இயேசுவே.

🔔 Joy · மகிழ்ச்சி

The birth of Jesus is good news for everyone.

இயேசுவின் பிறப்பு எல்லா மக்களுக்கும் நற்செய்தியாகும்.

❤️ Love · அன்பு

God showed His love by sending His Son.

தேவன் தமது குமாரனை அனுப்பியதன் மூலம் தமது அன்பை வெளிப்படுத்தினார்.

📖 Is Advent a Biblical Command? திருவருகைக் காலம் வேதாகமக் கட்டளையா?

The Bible does not require Christians to observe Advent. However, its central truths—Christ’s first coming, faithful waiting and His promised return—are firmly grounded in Scripture.

திருவருகைக் காலத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வேதாகமம் கிறிஸ்தவர்களுக்குக் கட்டளையிடவில்லை. ஆனால் கிறிஸ்துவின் முதல் வருகை, விசுவாசத்துடன் காத்திருத்தல், அவர் வாக்குப்பண்ணிய மறுவருகை ஆகிய அதன் மைய உண்மைகள் வேதாகம அடிப்படையுடையவை.

Its value does not come from candles, colours or customs. Its value comes from using the season to read Scripture, pray and reflect on Christ.

மெழுகுவர்த்திகள், வண்ணங்கள் அல்லது வழக்கங்கள் இதன் முக்கியத்துவத்தைத் தீர்மானிப்பதில்லை. வேதவசனத்தை வாசித்து, ஜெபித்து, கிறிஸ்துவைக் குறித்து தியானிப்பதில்தான் இதன் உண்மையான பயன் உள்ளது.

✨ How Advent Points Us to Jesus திருவருகைக் காலம் எவ்வாறு இயேசுவைச் சுட்டிக்காட்டுகிறது?

📜 Remember · நினைவுகூருங்கள்

We remember the promises God gave about the coming Saviour.

வரவிருந்த இரட்சகரைக் குறித்து தேவன் கொடுத்த வாக்குத்தத்தங்களை நினைவுகூருகிறோம்.

Isaiah 9:6 · ஏசாயா 9:6

👣 Follow · பின்பற்றுங்கள்

We consider how our lives can reflect the character of Jesus today.

இன்று நமது வாழ்க்கை எவ்வாறு இயேசுவின் குணத்தைப் பிரதிபலிக்கலாம் என்று சிந்திக்கிறோம்.

Ephesians 5:1–2 · எபேசியர் 5:1–2

👑 Anticipate · எதிர்நோக்குங்கள்

We look forward with hope to the day when Jesus will come again.

இயேசு மீண்டும் வரப்போகும் நாளை நம்பிக்கையுடன் எதிர்நோக்குகிறோம்.

John 14:3 · யோவான் 14:3

🌿 Key Truth · முக்கிய உண்மை

Advent becomes meaningful when we do more than follow a tradition and allow our hearts to respond to Christ.

ஒரு மரபைப் பின்பற்றுவதோடு நின்றுவிடாமல், நம் இருதயங்கள் கிறிஸ்துவுக்குப் பதிலளிக்கும்போது திருவருகைக் காலம் உண்மையான அர்த்தம் பெறுகிறது.

🏠 A Simple Family Advent Moment குடும்பத்திற்கான எளிய திருவருகை நேரம்

You do not need an elaborate activity. Set aside a few quiet minutes and follow these four simple steps.

விரிவான ஏற்பாடுகள் தேவையில்லை. சில அமைதியான நிமிடங்களை ஒதுக்கி, இந்த நான்கு எளிய படிகளைப் பின்பற்றுங்கள்.

📖 1. Read · வாசியுங்கள்

Read a short passage about God’s promise or the birth of Jesus.

தேவனுடைய வாக்குத்தத்தம் அல்லது இயேசுவின் பிறப்பைப் பற்றிய ஒரு குறுகிய வேதப்பகுதியை வாசியுங்கள்.

💬 2. Talk · உரையாடுங்கள்

Share one truth the passage reveals about Jesus.

அந்த வேதப்பகுதி இயேசுவைப் பற்றி வெளிப்படுத்தும் ஓர் உண்மையைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

🤲 3. Respond · செயல்படுத்துங்கள்

Choose one loving action your family can do for someone that week.

அந்த வாரத்தில் உங்கள் குடும்பம் ஒருவருக்காகச் செய்யக்கூடிய ஓர் அன்பின் செயலைத் தேர்ந்தெடுங்கள்.

🙏 4. Pray · ஜெபியுங்கள்

Thank God for sending Jesus and ask Him to guide your family.

இயேசுவை அனுப்பியதற்காக தேவனுக்கு நன்றி செலுத்தி, உங்கள் குடும்பத்தை வழிநடத்தும்படி ஜெபியுங்கள்.

💭 Family Reflection · குடும்பச் சிந்தனை

What can we change in our daily routine to give more attention to Jesus?

இயேசுவுக்கு அதிக கவனம் செலுத்துவதற்காக நமது அன்றாட வழக்கத்தில் எதை மாற்றலாம்?

📖 Memory Verse · மனப்பாட வசனம்

“For to us a child is born, to us a son is given.”
Isaiah 9:6
“நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்.”
ஏசாயா 9:6

🙏 Advent Prayer · திருவருகைக் கால ஜெபம்

Lord Jesus, thank You for coming into the world as our Saviour. Help us to know You more, follow Your ways and show Your love to others. Help us keep You at the centre of our home throughout this season. Amen.

கர்த்தராகிய இயேசுவே, எங்கள் இரட்சகராக இந்த உலகத்திற்கு வந்ததற்காக உமக்கு நன்றி. உம்மை மேலும் அறிந்துகொள்ளவும், உமது வழிகளைப் பின்பற்றவும், மற்றவர்களுக்கு உமது அன்பைக் காட்டவும் எங்களை வழிநடத்தும். இந்த நாட்கள் முழுவதும் எங்கள் இல்லத்தில் உம்மையே மையமாகக் கொள்ள உதவும். ஆமென்.

Advent is a historic Christian season, not a biblical command. Its practices and weekly themes vary among church traditions. This study uses them as devotional aids centred on Scripture and Christ.

திருவருகைக் காலம் வரலாற்றில் உருவான ஒரு கிறிஸ்தவ மரபாகும்; அது வேதாகமக் கட்டளை அல்ல. அதன் வழக்கங்களும் வாராந்திர கருப்பொருள்களும் சபை மரபுகளின்படி மாறுபடும். இந்த ஆய்வு அவற்றை வேதவசனத்தையும் கிறிஸ்துவையும் மையமாகக் கொண்ட தியான உதவிகளாகப் பயன்படுத்துகிறது.

Let us grow with Scripture.
தேவனுடைய வார்த்தையில் வளர்வோம்.