Zechariah and Elizabeth Bible Character Study | சகரியாவும் எலிசபெத்தும்
Zechariah and Elizabeth
சகரியாவும் எலிசபெத்தும்
Faithful Through Long Waiting
நீண்ட காத்திருப்பிலும் உண்மையாக இருந்தவர்கள்
Before the angel Gabriel told Mary about the birth of Jesus, God sent him to Zechariah with another special message.
தேவதூதனாகிய காபிரியேல் இயேசுவின் பிறப்பைப் பற்றி மரியாளுக்கு அறிவிப்பதற்கு முன், தேவன் அவரை ஒரு சிறப்பான செய்தியுடன் சகரியாவிடம் அனுப்பினார்.
Zechariah and Elizabeth had grown old without having a child. Although their waiting had been long and difficult, they continued living faithfully before God.
சகரியாவும் எலிசபெத்தும் பிள்ளையில்லாமலேயே முதிர்வயதை அடைந்திருந்தார்கள். அவர்களுடைய காத்திருப்பு நீண்டதாகவும் கடினமாகவும் இருந்தபோதும், அவர்கள் தேவனுக்கு முன்பாக உண்மையாக வாழ்ந்தார்கள்.
At the right time, God answered their prayer and gave them a son named John.
சரியான நேரத்தில், தேவன் அவர்களுடைய ஜெபத்திற்குப் பதிலளித்து யோவான் என்ற மகனைக் கொடுத்தார்.
👀 Character Snapshot
சுருக்கமான அறிமுகம்
ZECHARIAH
சகரியா
Priest
ஆசாரியன்
Luke 1:5 | லூக்கா 1:5
ELIZABETH
எலிசபெத்து
Descendant of Aaron
ஆரோனுடைய சந்ததியைச் சேர்ந்தவர்
Luke 1:5 | லூக்கா 1:5
THEIR LIFE
அவர்களுடைய வாழ்க்கை
Righteous before God
தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்கள்
Luke 1:6 | லூக்கா 1:6
THEIR HOME
அவர்களுடைய வீடு
Hill country of Judea
யூதேயாவின் மலைநாடு
Luke 1:39–40 | லூக்கா 1:39–40
THEIR SON
அவர்களுடைய மகன்
John the Baptist
யோவான் ஸ்நானன்
Luke 1:13; 3:2–3 | லூக்கா 1:13; 3:2–3
🌿 Faithful Every Day
Zechariah and Elizabeth lived faithfully before God. Their long wait did not stop them from obeying Him.
சகரியாவும் எலிசபெத்தும் தேவனுக்கு முன்பாக உண்மையாக வாழ்ந்தார்கள். நீண்ட காலம் காத்திருந்தபோதும், அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தவில்லை.
🕯️ Continued Serving God
Zechariah continued serving as a priest. While he was serving in the temple, the angel Gabriel brought him God’s message.
சகரியா தனது ஆசாரிய ஊழியத்தைத் தொடர்ந்து செய்தார். அவர் தேவாலயத்தில் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது, தேவதூதனாகிய காபிரியேல் தேவனுடைய செய்தியை அவரிடம் கொண்டுவந்தார்.
✨ Recognized What God Was Doing
Elizabeth was filled with the Holy Spirit. She understood that Mary was the mother of her Lord and rejoiced with her.
எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார். மரியாள் தன் ஆண்டவரின் தாயாக இருப்பதை அறிந்து, அவளுடன் மகிழ்ந்தார்.
🤝 Obeyed God Together
The angel Gabriel told Zechariah to name the child John. Later, both Elizabeth and Zechariah confirmed the same name.
குழந்தைக்கு யோவான் என்று பெயரிடும்படி தேவதூதனாகிய காபிரியேல் சகரியாவிடம் கூறினார். பின்னர் எலிசபெத்தும் சகரியாவும் அதே பெயரை உறுதிப்படுத்தினார்கள்.
🌱 Key Lesson | முக்கியப் பாடம்
Faithfulness in everyday life prepares us to obey God in important moments.
அன்றாட வாழ்வில் உண்மையாக இருப்பது, முக்கியமான தருணங்களில் தேவனுக்குக் கீழ்ப்படிய நம்மை ஆயத்தப்படுத்துகிறது.
🌧️ Struggles and Challenges
போராட்டங்களும் சவால்களும்
⏳ A Long and Difficult Wait
Zechariah and Elizabeth had no child, and they had both grown old. Elizabeth also spoke about the shame she had experienced among the people.
சகரியாவுக்கும் எலிசபெத்துக்கும் பிள்ளை இல்லை. அவர்கள் இருவரும் முதிர்வயதை அடைந்திருந்தார்கள். இதனால் மக்களிடையே தான் அனுபவித்த அவமானத்தைப் பற்றியும் எலிசபெத்து கூறினார்.
❓ Zechariah Found It Hard to Believe
The angel Gabriel told Zechariah that Elizabeth would have a son. Because they were both old, Zechariah found the message difficult to believe.
எலிசபெத்துக்கு ஒரு மகன் பிறப்பான் என்று தேவதூதனாகிய காபிரியேல் சகரியாவிடம் கூறினார். அவர்கள் இருவரும் முதிர்வயதை அடைந்திருந்ததால், அந்தச் செய்தியை நம்புவதற்குச் சகரியா தடுமாறினார்.
🤐 He Could Not Speak
Because Zechariah did not believe Gabriel’s message, he could not speak. On the day the child was named, he wrote, “His name is John.” Immediately, he was able to speak again and began praising God.
காபிரியேல் கூறிய செய்தியைச் சகரியா நம்பாததால், அவரால் பேச முடியவில்லை. குழந்தைக்குப் பெயரிடப்பட்ட நாளில், “இவன் பேர் யோவான்” என்று சகரியா எழுதினார். உடனே அவர் மீண்டும் பேசத் தொடங்கி தேவனைத் துதித்தார்.
🌿 Key Lesson | முக்கியப் பாடம்
Even faithful people can have moments of doubt. When this happens, we can return to God’s word and choose to trust Him.
தேவனுக்கு உண்மையாக வாழ்பவர்களுக்குக்கூட சில நேரங்களில் சந்தேகம் வரலாம். அத்தகைய நேரங்களில், தேவனுடைய வார்த்தைக்குத் திரும்பி அவரை நம்ப நாம் தீர்மானிக்கலாம்.
🌱 Lessons from Their Lives
அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து பாடங்கள்
Pain Does Not Always Mean Someone Has Done Wrong
Zechariah and Elizabeth were righteous before God, yet they experienced a long and difficult wait. Someone’s pain does not always mean that they have done something wrong.
சகரியாவும் எலிசபெத்தும் தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாக இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் நீண்ட, கடினமான காத்திருப்பை அனுபவித்தார்கள். ஒருவர் வேதனையை அனுபவிப்பதால், அவர் தவறு செய்திருக்கிறார் என்று எப்போதும் சொல்ல முடியாது.
Accept God’s Correction
Zechariah faced the result of his unbelief. Later, he obeyed God and used his restored voice to praise Him.
சகரியா தேவனுடைய செய்தியை நம்பாததன் விளைவைச் சந்தித்தார். பின்னர் அவர் தேவனுக்குக் கீழ்ப்படிந்து, மீண்டும் பேச முடிந்தபோது தேவனைத் துதித்தார்.
Encourage Others
Elizabeth rejoiced with Mary and praised her for believing God’s promise. We can also use our words to strengthen someone else’s faith.
எலிசபெத்து மரியாளுடன் மகிழ்ந்து, தேவனுடைய வாக்குத்தத்தத்தை நம்பியதற்காக அவளைப் பாராட்டினார். நாமும் நமது வார்த்தைகளால் மற்றவர்களின் விசுவாசத்தைப் பலப்படுத்தலாம்.
Remember God’s Greater Plan
Zechariah praised God not only for his son, but also for the salvation God was bringing to His people.
சகரியா தனது மகனுக்காக மட்டும் தேவனைத் துதிக்கவில்லை. தேவன் தமது மக்களுக்குக் கொண்டுவரும் இரட்சிப்பிற்காகவும் அவரைத் துதித்தார்.
💚 Life Reminder | வாழ்க்கைக்கான நினைவூட்டல்
God can use even our seasons of waiting to bless others.
நாம் காத்திருக்கும் காலத்தைக்கூட தேவன் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாகப் பயன்படுத்த முடியும்.
❤️ Why Are They Remembered?
அவர்கள் ஏன் நினைவுகூரப்படுகிறார்கள்?
They are remembered for more than receiving the child they had waited for.
அவர்கள் நீண்ட காலம் காத்திருந்து ஒரு குழந்தையைப் பெற்றதற்காக மட்டும் நினைவுகூரப்படவில்லை.
God included their family in the beginning of the gospel story. Their son John was chosen to prepare people for the coming of the Lord.
நற்செய்தியின் தொடக்க நிகழ்வுகளில் தேவன் அவர்களுடைய குடும்பத்தையும் இணைத்தார். கர்த்தருடைய வருகைக்காக மக்களை ஆயத்தப்படுத்த அவர்களுடைய மகனாகிய யோவான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
God had not forgotten them. He used their long wait as part of His greater plan.
தேவன் அவர்களை மறக்கவில்லை. அவர்களுடைய நீண்ட காத்திருப்பையும் தமது பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தினார்.
🔗 People Connected to Their Story
அவர்களுடன் தொடர்புடையவர்கள்
👼 The angel Gabriel
Brought God’s message to Zechariah.
தேவனுடைய செய்தியைச் சகரியாவிடம் கொண்டுவந்தார்.
👶 John
The son God promised to Zechariah and Elizabeth.
சகரியாவுக்கும் எலிசபெத்துக்கும் தேவன் வாக்குப்பண்ணிய மகன்.
👩 Mary
Elizabeth’s relative who visited her during her pregnancy.
எலிசபெத்தின் உறவினர். எலிசபெத்து கர்ப்பமாக இருந்தபோது அவரைச் சந்தித்தார்.
👑 Jesus
John was sent ahead of Him to prepare people for His coming.
அவரது வருகைக்காக மக்களை ஆயத்தப்படுத்த யோவான் முன்னதாக அனுப்பப்பட்டார்.
💭 Think About It
சிந்தித்துப் பாருங்கள்
What helps you trust God while you wait?
காத்திருக்கும்போது தேவனை நம்ப உங்களுக்கு எது உதவுகிறது?
Has disappointment ever made believing difficult for you?
ஏமாற்றத்தால் தேவனை நம்புவது உங்களுக்குக் கடினமாக இருந்ததுண்டா?
Whom can you encourage this week?
இந்த வாரம் நீங்கள் யாரை ஊக்கப்படுத்தலாம்?
📖 Memory Verse
“For no word from God will ever fail.”
Luke 1:37
“தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை.”
லூக்கா 1:37
🙏 Prayer
Lord, help us remain faithful when waiting is difficult. When we struggle to believe, bring us back to Your word. Use our lives and words to encourage others and help them follow Jesus. Amen.
கர்த்தாவே, காத்திருப்பது கடினமாக இருக்கும்போதும் உமக்கு உண்மையாக இருக்க எங்களுக்கு உதவும். நம்புவதற்குத் தடுமாறும்போது, உமது வார்த்தையிடம் எங்களைத் திருப்பும். மற்றவர்களை ஊக்கப்படுத்தவும், அவர்கள் இயேசுவைப் பின்பற்ற உதவவும் எங்கள் வாழ்க்கையையும் வார்த்தைகளையும் பயன்படுத்தும். ஆமென்.


