Burnt Offering in the Bible | சர்வாங்க தகனபலி
This post explains what the burnt offering was, why it was offered, how it was presented and when it was offered.
சர்வாங்க தகனபலி என்றால் என்ன, அது ஏன் செலுத்தப்பட்டது, எப்படி செலுத்தப்பட்டது, எப்போது செலுத்தப்பட்டது என்பதை இந்தப் பதிவு விளக்குகிறது.
What was the burnt offering?சர்வாங்க தகனபலி என்றால் என்ன?
A burnt offering was a bull, sheep, goat or bird offered to the Lord and burned on the altar.
காளை, செம்மறியாடு, வெள்ளாடு அல்லது பறவையைக் கர்த்தருக்குப் பலியாகச் செலுத்தி, பலிபீடத்தில் எரிப்பதே சர்வாங்க தகனபலி.
Leviticus describes it as “a sweet savour unto the LORD.”
இது “கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி” என்று லேவியராகமம் சொல்கிறது.
Leviticus 1:9, 13, 17லேவியராகமம் 1:9, 13, 17What could be offered?எவற்றைப் பலியாகச் செலுத்தலாம்?
Bull, male sheep, male goat, turtledove or young pigeon • காளை, ஆண் செம்மறியாடு, ஆண் வெள்ளாடு, காட்டுப்புறா அல்லது புறாக்குஞ்சு
From the herd மாட்டு மந்தையிலிருந்து
A bull without blemish.
பழுதற்ற ஒரு காளை.
Leviticus 1:3லேவியராகமம் 1:3From the flock ஆட்டு மந்தையிலிருந்து
A male sheep or goat without blemish.
பழுதற்ற ஆண் செம்மறியாடு அல்லது வெள்ளாடு.
Leviticus 1:10லேவியராகமம் 1:10From the birds பறவைகளிலிருந்து
Turtledoves or young pigeons.
காட்டுப்புறாக்கள் அல்லது புறாக்குஞ்சுகள்.
Leviticus 1:14லேவியராகமம் 1:14How was it offered?இது எப்படிச் செலுத்தப்பட்டது?
Burnt-offering procedure • சர்வாங்க தகனபலி செலுத்தப்பட்ட முறை
Bull காளை
Sheep or goat: The main preparation was similar. Leviticus specifically says that it was killed on the north side of the altar. It was cut into pieces; the inner parts and legs were washed; and the priest arranged and burned it on the altar.
செம்மறியாடு அல்லது வெள்ளாடு: முக்கியமான ஆயத்த முறைகள் இதேபோல் இருந்தன. ஆனால் அது பலிபீடத்தின் வடபக்கத்தில் கொல்லப்பட வேண்டும் என்று லேவியராகமம் குறிப்பாகச் சொல்கிறது. அது துண்டுகளாக வெட்டப்பட்டது; உள்ளுறுப்புகளும் கால்களும் கழுவப்பட்டன; ஆசாரியர் அவற்றைப் பலிபீடத்தில் அடுக்கி எரித்தார்.
Leviticus 1:10–13லேவியராகமம் 1:10–13If a bird was offered பறவை சர்வாங்க தகனபலியாகச் செலுத்தப்பட்டால்
Bird burnt-offering procedure • பறவை சர்வாங்க தகனபலியாகச் செலுத்தப்பட்ட முறை
A turtledove or a young pigeon could also be brought as a burnt offering. In this case, the priest performed the procedure at the altar.
காட்டுப்புறாவையோ புறாக்குஞ்சையையோ சர்வாங்க தகனபலியாகச் செலுத்தலாம். இந்தப் பலியை ஆசாரியரே பலிபீடத்தில் செலுத்தினார்.
Why was it offered?இது ஏன் செலுத்தப்பட்டது?
To make atonement பாவநிவிர்த்தி செய்வதற்காக
It was offered to make atonement for the person who brought it.
பலியைக் கொண்டுவந்தவருக்குப் பாவநிவிர்த்தி செய்வதற்காக அது செலுத்தப்பட்டது.
Leviticus 1:4லேவியராகமம் 1:4When was it offered?இது எப்போது செலுத்தப்பட்டது?
Every day தினமும்
One lamb was offered in the morning and another in the evening.
ஒரு ஆட்டுக்குட்டி காலையிலும் மற்றொன்று மாலையிலும் செலுத்தப்பட்டது.
Exodus 29:38–42யாத்திராகமம் 29:38–42Sabbaths, New Moons and festival days ஓய்வுநாட்கள், மாதப்பிறப்பு நாட்கள், பண்டிகை நாட்கள்
Additional burnt offerings were offered on Sabbaths, New Moons and the festival days commanded by the Lord.
ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்பு நாட்களிலும் கர்த்தர் கட்டளையிட்ட பண்டிகை நாட்களிலும் கூடுதல் சர்வாங்க தகனபலிகள் செலுத்தப்பட்டன.
Numbers 28–29எண்ணாகமம் 28–29Voluntary offerings விருப்பத்துடன் செலுத்திய பலிகள்
Individuals could bring a burnt offering voluntarily or in fulfilment of a vow.
ஒருவர் தன் விருப்பத்தின்படியோ, நேர்ந்துகொண்டதை நிறைவேற்றுவதற்காகவோ சர்வாங்க தகனபலியைச் செலுத்தலாம்.
Leviticus 22:18லேவியராகமம் 22:18Special occasions சில சிறப்பு நிகழ்வுகள்
They were also used during priestly consecration and certain purification ceremonies.
ஆசாரியர்கள் தேவபணிக்காக நியமிக்கப்பட்டபோதும், சில சுத்திகரிப்பு முறைகளின்போதும் இந்தப் பலி செலுத்தப்பட்டது.
Exodus 29; Leviticus 12:6–8யாத்திராகமம் 29; லேவியராகமம் 12:6–8The priests had to keep the altar fire burning continually. It was not to go out.
பலிபீடத்தின் நெருப்பு எப்போதும் எரிந்துகொண்டிருக்கும்படி ஆசாரியர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். அது அணையக்கூடாது.
Leviticus 6:9, 12–13லேவியராகமம் 6:9, 12–13What happened afterward?பலி செலுத்தப்பட்ட பிறகு என்ன நடந்தது?
The animal’s skin மிருகத்தின் தோல்
The priest who offered the burnt offering received its skin.
சர்வாங்க தகனபலியைச் செலுத்திய ஆசாரியருக்கு அதன் தோல் கொடுக்கப்பட்டது.
Leviticus 7:8லேவியராகமம் 7:8The ashes சாம்பல்
Wearing his linen garments, the priest removed the ashes left after the offering had burned and placed them beside the altar. He then changed his garments and carried the ashes outside the camp to a clean place.
ஆசாரியர் சணல்நூல் ஆடைகளை அணிந்து, பலி எரிந்தபின் இருந்த சாம்பலை எடுத்துப் பலிபீடத்தின் அருகே வைத்தார். பிறகு வேறு ஆடைகளை அணிந்து, அந்தச் சாம்பலைப் பாளயத்திற்கு வெளியே இருந்த சுத்தமான இடத்திற்குக் கொண்டுபோனார்.
Leviticus 6:10–11லேவியராகமம் 6:10–11Connection to Christகிறிஸ்துவோடு உள்ள தொடர்பு
Hebrews 10 names burnt offerings among the sacrifices required by the law. They were offered repeatedly, but they could not take away sins.
Christ gave Himself for us as an offering and a sacrifice to God, for a sweet-smelling savour. After giving Himself as the one sacrifice for sins, He sat down forever at the right hand of God.
நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்ட பலிகளோடு சர்வாங்க தகனபலிகளையும் எபிரெயர் 10 குறிப்பிடுகிறது. அவை மீண்டும் மீண்டும் செலுத்தப்பட்டன; ஆனால் அவற்றால் பாவங்களை நீக்க முடியவில்லை.
கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்தார். பாவங்களுக்காகத் தம்மையே ஒரே பலியாகக் கொடுத்தபின், அவர் என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார்.