Parallel Kings of Israel and Judah Timeline | இஸ்ரவேல்–யூதா இணை அரசர்கள்
Kings of Israel and Judah
A parallel Bible timeline from the divided kingdom to exile.
இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ராஜாக்கள்
பிரிந்த ராஜ்யத்திலிருந்து சிறையிருப்பு வரை ஓர் இணையான வேதாகம காலவரிசை.
How to Read This Timeline
After Solomon, the kingdom divided. Israel was the northern kingdom; Judah was the southern kingdom. Each date band compares the rulers whose reigns overlapped during that period. The dates are approximate; the biblical order and stated reign lengths remain the main guide.
Want a wider comparison?
Rotate your phone or choose “Desktop site” from your browser menu to see Israel and Judah side by side. The complete timeline is still available below in mobile view.
Why do some dates overlap?At times, a king’s son began sharing royal responsibilities while his father was still reigning. This is called a co-regency. Ancient kingdoms also counted accession years and partial years differently, so reconstructed BCE dates may vary by a few years. Pekah may have ruled as a rival claimant before becoming Israel’s sole king.
How the Two Kingdoms Ended
Israel — Samaria Falls
Hoshea was Israel’s last king. Assyria captured Samaria and deported many Israelites, about 722/721 BC.
Read: 2 Kings 17Judah — Jerusalem Falls
Zedekiah was Judah’s last king. Babylon destroyed Jerusalem and the temple, about 587/586 BC, and took many people into exile.
Read: 2 Kings 24–25Next
Prophets and Kings: who spoke during each king’s reign?
இந்தக் காலவரிசையை எப்படி வாசிப்பது?
சாலொமோனுக்குப் பிறகு ராஜ்யம் பிரிந்தது. இஸ்ரவேல் வடக்கு ராஜ்யமாகவும், யூதா தெற்கு ராஜ்யமாகவும் இருந்தது. ஒவ்வொரு காலப்பகுதியிலும் ஒரே காலத்தில் ஆட்சி செய்த ராஜாக்கள் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளனர். கி.மு. ஆண்டுகள் தோராயமானவை; வேதாகம வரிசையும் அதில் கொடுக்கப்பட்ட ஆட்சிக்காலங்களும் முதன்மையானவை.
அகலமான ஒப்பீடு வேண்டுமா?
இஸ்ரவேல் மற்றும் யூதாவை அருகருகே பார்க்க, போனைத் திருப்பிப் பார்க்கலாம் அல்லது browser menu-வில் “Desktop site” என்பதைத் தேர்ந்தெடுக்கலாம். முழுக் காலவரிசையையும் கீழே mobile view-இல் தொடர்ந்து வாசிக்கலாம்.
சில தேதிகள் ஏன் ஒன்றோடொன்று ஒட்டுகின்றன?சில காலங்களில், தந்தை ராஜாவாக இருந்தபோதே அவரது மகனும் ஆட்சிப் பொறுப்புகளை ஏற்று, அவருடன் சேர்ந்து ஆட்சி செய்தார். இதையே “இணை ஆட்சி” என்று அழைக்கிறோம். பழங்காலத்தில் ஆட்சி தொடங்கிய ஆண்டையும் முழுமையடையாத ஆண்டுகளையும் வெவ்வேறு முறைகளில் கணக்கிட்டனர். அதனால் காலவரிசைகளில் கொடுக்கப்படும் கி.மு. தேதிகள் சில ஆண்டுகள் மாறுபடலாம். பெக்கா தனியாக ராஜாவாவதற்கு முன்பு போட்டி ஆட்சியாளராக இருந்திருக்கலாம்.
இரண்டு ராஜ்யங்களின் முடிவு
இஸ்ரவேல் — சமாரியா வீழ்ந்தது
ஓசேயா இஸ்ரவேலின் கடைசி ராஜா. கி.மு. 722/721 அளவில் அசீரியா சமாரியாவைக் கைப்பற்றி, பல இஸ்ரவேலரை நாடுகடத்தியது.
வாசிக்க: 2 இராஜாக்கள் 17யூதா — எருசலேம் வீழ்ந்தது
சிதேக்கியா யூதாவின் கடைசி ராஜா. கி.மு. 587/586 அளவில் பாபிலோன் எருசலேமையும் ஆலயத்தையும் அழித்து, பலரைச் சிறையிருப்புக்குக் கொண்டு சென்றது.
வாசிக்க: 2 இராஜாக்கள் 24–25அடுத்ததாக
தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும்: எந்த ராஜாவின் காலத்தில் யார் பேசினார்கள்?