Why Did Israel’s Kingdom Divide? | இஸ்ரவேல் ராஜ்யம் ஏன் இரண்டாகப் பிரிந்தது?
Why Did Israel’s Kingdom Divide?
Follow the events that changed one united kingdom into Israel in the north and Judah in the south.
இஸ்ரவேல் ராஜ்யம் ஏன் இரண்டாகப் பிரிந்தது?
ஒன்றுபட்ட ராஜ்யம் எப்படி வடக்கே இஸ்ரவேல் என்றும் தெற்கே யூதா என்றும் பிரிந்தது?
From One Kingdom to Two
Saul, David and Solomon ruled Israel before the kingdom divided. After Solomon’s death, most of the northern tribes rejected the rule of his son Rehoboam and made Jeroboam their king. From then on, Israel in the north and Judah in the south developed as separate kingdoms.
Solomon’s Later Disobedience
Solomon began with wisdom and devotion to God. In his later years, however, his foreign wives turned his heart toward other gods. He built places of worship for them and did not remain fully devoted to the Lord as David his father had been.
God announced that most of the kingdom would be taken from Solomon’s dynasty after his death. A portion would remain with David’s house because of God’s promise concerning David and Jerusalem.
Read: 1 Kings 11:1–13Ahijah and the Torn Garment
Jeroboam was one of Solomon’s capable officials. The prophet Ahijah met him outside Jerusalem, tore a new garment into twelve pieces and told Jeroboam to take ten pieces. This sign showed that Jeroboam would rule over most of Israel’s tribes, while a portion would remain with David’s dynasty.
Read: 1 Kings 11:26–40
The People Asked for Relief
After Solomon died, Rehoboam went to Shechem, where the people gathered to make him king. Jeroboam returned from Egypt and joined Israel’s representatives. They asked Rehoboam to reduce the heavy service and burden placed upon them during Solomon’s reign.
Read: 1 Kings 12:1–5; 2 Chronicles 10:1–5Rehoboam Chose the Harsher Advice
The experienced elders advised Rehoboam to serve the people and answer them kindly. Rehoboam rejected their counsel and followed the young men who told him to increase the people’s burden. His harsh reply showed that he had not listened to their concern.
Read: 1 Kings 12:6–15; 2 Chronicles 10:6–15
The Kingdom Divided
The northern tribes rejected Rehoboam’s rule and made Jeroboam their king. Rehoboam continued ruling from Jerusalem over the southern kingdom of Judah. Scripture presents the division as both the result of human decisions and the fulfilment of what God had spoken through Ahijah.
Read: 1 Kings 12:16–20; 2 Chronicles 10:16–19Northern Kingdom — Israel
Southern Kingdom — Judah
A Civil War Was Prevented
Rehoboam gathered an army from Judah and Benjamin to bring the northern kingdom back under his control. Through the prophet Shemaiah, God commanded them not to fight against their fellow Israelites. They obeyed and returned home.
Read: 1 Kings 12:21–24; 2 Chronicles 11:1–4Jeroboam Changed Israel’s Worship
Jeroboam feared that continued worship at Jerusalem might turn the people back toward Rehoboam. He established worship centres at Bethel and Dan, made two golden calves, appointed priests and introduced a festival of his own choosing.
Why Did the Kingdom Divide?
The division cannot be explained by one event alone. Scripture connects several causes:
Historical Note
The division is commonly placed around 931/930 BC, though chronological systems may differ by a few years. Jeroboam first established himself at Shechem and also fortified Penuel. Tirzah later became an important northern royal residence. Samaria was built much later by King Omri, so it should not be called Israel’s capital at the time of the original division.
What Can We Learn?
Continue Learning
See which kings ruled Israel and Judah during the same periods.
Open the Parallel Kings Timelineஒரே ராஜ்யத்திலிருந்து இரண்டு ராஜ்யங்கள்
ராஜ்யம் பிரிக்கப்படுவதற்கு முன்பு சவுல், தாவீது, சாலொமோன் ஆகியோர் இஸ்ரவேலை ஆட்சி செய்தனர். சாலொமோன் இறந்த பிறகு, வடக்கிலிருந்த பெரும்பாலான கோத்திரங்கள் அவரது மகன் ரெகொபெயாமின் ஆட்சியை ஏற்க மறுத்து, யெரொபெயாமைத் தங்கள் ராஜாவாக ஏற்படுத்தின. அப்போது முதல் வடக்கே இஸ்ரவேலும் தெற்கே யூதாவும் தனித்தனி ராஜ்யங்களாக இயங்கின.
சாலொமோனின் பிற்கால கீழ்ப்படியாமை
சாலொமோன் ஞானத்தோடும் தேவபக்தியோடும் தனது ஆட்சியைத் தொடங்கினார். ஆனால் அவரது பிற்காலத்தில், அந்நிய தேசங்களைச் சேர்ந்த அவரது மனைவிகள் அவருடைய இருதயத்தை வேறு தேவர்களைப் பின்பற்றும்படி திருப்பினார்கள். அவர்களுக்காக வழிபாட்டு இடங்களையும் அமைத்தார். தனது தகப்பனாகிய தாவீதைப்போல அவர் முழு இருதயத்தோடு கர்த்தரைப் பின்பற்றவில்லை.
எனவே ராஜ்யத்தின் பெரும்பகுதி அவரது வம்சத்திலிருந்து பிரிக்கப்படும் என்று தேவன் அறிவித்தார். ஆனால் தாவீதுக்கும் எருசலேமுக்கும் கொடுத்த வாக்குத்தத்தத்தின்படி, இது சாலொமோனின் மரணத்திற்குப் பிறகு நடைபெறும்; ஒரு பகுதி தாவீதின் வம்சத்திடம் தொடரும்.
வாசிக்க: 1 இராஜாக்கள் 11:1–13அகியாவும் கிழிக்கப்பட்ட புதிய சால்வையும்
யெரொபெயாம் சாலொமோனின் திறமையான அதிகாரிகளில் ஒருவர். சீலோனியனாகிய அகியா தீர்க்கதரிசி எருசலேமுக்கு வெளியே அவரைச் சந்தித்தார். அகியா தான் அணிந்திருந்த புதிய சால்வையைப் பன்னிரண்டு துண்டுகளாகக் கிழித்து, அவற்றில் பத்துத் துண்டுகளை யெரொபெயாமிடம் எடுத்துக்கொள்ளச் சொன்னார். இஸ்ரவேலின் பெரும்பாலான கோத்திரங்கள்மீது யெரொபெயாம் ஆட்சி செய்வார் என்பதை இந்த அடையாளம் தெரிவித்தது.
வாசிக்க: 1 இராஜாக்கள் 11:26–40
மக்கள் தங்கள் சுமையைக் குறைக்கும்படி கேட்டனர்
சாலொமோன் இறந்த பிறகு, மக்களால் ராஜாவாக ஏற்படுத்தப்படுவதற்காக ரெகொபெயாம் சீகேமுக்குச் சென்றார். எகிப்திலிருந்து திரும்பிய யெரொபெயாமும் இஸ்ரவேல் மக்களின் பிரதிநிதிகளுடன் அவரைச் சந்தித்தார். சாலொமோனின் காலத்தில் தங்கள்மீது வைக்கப்பட்ட வேலைப்பளுவையும் சுமையையும் குறைக்கும்படி அவர்கள் கேட்டனர்.
வாசிக்க: 1 இராஜாக்கள் 12:1–5; 2 நாளாகமம் 10:1–5ரெகொபெயாம் கடுமையான ஆலோசனையைத் தேர்ந்தெடுத்தார்
சாலொமோனிடம் பணியாற்றிய அனுபவமுள்ள மூப்பர்கள், மக்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களிடம் அன்பாகப் பேசும்படி ரெகொபெயாமிடம் கூறினர். ஆனால் அவர் அந்த ஆலோசனையை நிராகரித்து, மக்களின் சுமையை மேலும் அதிகரிக்கும்படி கூறிய தன்னோடு வளர்ந்த இளைஞர்களின் ஆலோசனையைப் பின்பற்றினார்.
வாசிக்க: 1 இராஜாக்கள் 12:6–15; 2 நாளாகமம் 10:6–15
ராஜ்யம் இரண்டாகப் பிரிந்தது
வடக்கிலிருந்த கோத்திரங்கள் ரெகொபெயாமின் ஆட்சியை ஏற்க மறுத்து, யெரொபெயாமைத் தங்கள் ராஜாவாக ஏற்படுத்தின. ரெகொபெயாம் எருசலேமிலிருந்து தெற்கு ராஜ்யமான யூதாவைத் தொடர்ந்து ஆட்சி செய்தார். மனிதர்களின் முடிவுகளின் விளைவாகவும், அகியா மூலம் தேவன் முன்பே அறிவித்த வார்த்தையின் நிறைவேற்றமாகவும் இந்தப் பிரிவை வேதாகமம் காட்டுகிறது.
வாசிக்க: 1 இராஜாக்கள் 12:16–20; 2 நாளாகமம் 10:16–19வடக்கு ராஜ்யம் — இஸ்ரவேல்
தெற்கு ராஜ்யம் — யூதா
உள்நாட்டுப் போர் தடுக்கப்பட்டது
வடக்கு ராஜ்யத்தை மீண்டும் தனது ஆட்சிக்குள் கொண்டுவர ரெகொபெயாம் யூதாவிலும் பென்யமீனிலும் இருந்து ஒரு படையைத் திரட்டினார். ஆனால் தங்கள் சகோதரர்களாகிய இஸ்ரவேல் மக்களுக்கு எதிராகப் போரிட வேண்டாம் என்று செமாயா தீர்க்கதரிசி மூலம் தேவனுடைய வார்த்தை வந்தது. அவர்கள் கீழ்ப்படிந்து திரும்பிச் சென்றனர்.
வாசிக்க: 1 இராஜாக்கள் 12:21–24; 2 நாளாகமம் 11:1–4யெரொபெயாம் இஸ்ரவேலின் வழிபாட்டு முறையை மாற்றினார்
மக்கள் தொடர்ந்து எருசலேமுக்குச் சென்று வழிபட்டால், அவர்கள் மீண்டும் ரெகொபெயாமிடம் திரும்பிவிடுவார்கள் என்று யெரொபெயாம் பயந்தார். அதனால் பெத்தேலிலும் தாணிலும் வழிபாட்டு மையங்களை அமைத்து, இரண்டு பொற்கன்றுக்குட்டிகளைச் செய்து, ஆசாரியர்களை நியமித்து, தானாகத் தேர்ந்தெடுத்த ஒரு பண்டிகையையும் ஏற்படுத்தினார்.
ராஜ்யம் ஏன் பிரிந்தது?
ராஜ்யம் பிரிந்ததற்கு ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் காரணமாகக் கூற முடியாது. வேதாகமம் பல காரணங்களை இணைத்துக் காட்டுகிறது:
வரலாற்றுக் குறிப்பு
ராஜ்யம் பிரிந்த நிகழ்வு பொதுவாக கி.மு. 931/930 காலப்பகுதியில் வைக்கப்படுகிறது. பயன்படுத்தப்படும் காலக்கணிப்பு முறையைப் பொறுத்து சில ஆண்டுகள் வேறுபடலாம். யெரொபெயாம் முதலில் சீகேமில் ஆட்சி செய்து பெனூவேலையும் பலப்படுத்தினார். பின்னர் திர்சா முக்கிய அரச இருப்பிடமாக இருந்தது. சமாரியா பல ஆண்டுகளுக்குப் பிறகு உம்ரி ராஜாவால் கட்டப்பட்டது. எனவே ராஜ்யம் முதலில் பிரிந்தபோது சமாரியாவை இஸ்ரவேலின் தலைநகரம் என்று குறிப்பிடக்கூடாது.
நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
தொடர்ந்து அறிந்துகொள்ளுங்கள்
ஒரே காலத்தில் இஸ்ரவேலையும் யூதாவையும் ஆட்சி செய்த ராஜாக்களைப் பாருங்கள்.
இணை அரசர்கள் காலவரிசையைப் பார்க்க